Sunday, 13 October 2019

இயற்கைச் சந்தை அக்டோபர் 25, 26

அக்டோபர் 25, 25 - 2019

"குப்பை உணவுகள் உலக மக்களின்
ஆரோக்கியத்தை அழித்து வரும்
அணுகுண்டுகள். ஐந்து ரூபாய் விலையுள்ள
லேஸ் சிப்சும் பந்து ரூபாய் மதிப்புள்ள
கோக்கும் உங்கள் குழந்தைகள்
வயிற்றையும் ஆளுமை வளர்ச்சியும்
அரிந்துக் கரைத்து வெறும் தக்கைகளாகத்
துப்பி விடும்" என்ற எச்சரிக்கையோடு
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை
அறிவியல் தமிழ்க் கல்லூரி இயற்கைச்
சந்தை பார்வையாளர்களை வரவேற்றது

தேங்காய் லட்டு, உக்ரா, தேன் நெல்லி
என்று நாம் மறந்த பாரம்பரிய உணவு
வகைகளைப் பாய் விரித்து, அங்காடி
அமைத்து, அழகுற வடிவமைத்திருந்தனர்.

கல்லூரி மாணவர்களும், பள்ளி
மாணவர்களும் அங்காடியில் இடம்பிடித்க
விதவிதமான உணவுப் பொருட்களை
உண்டு மகிழ்ந்தனர்.

சமையலமைகளே துவமனைகள்' என்ற பொருண்மையில் அக்ஷயா
இயற்கைக் களஞ்சிய நிறுவனர் திருமதி.பிரியதர்ஷினி ரங்கநாதன்
அவர்கள் மாணவர்களுடன்
கலந்துரையாடினார்.

மேலும் அவர் மகன் திரு.கார்த்திக் அவர்கள் கூறுகையில், "இது மிகவும் நல்ல முயற்சி
மாணவர்களிடத்து மரபை கொண்டு சேர்க்க
மிகவும் அவசியமான தேவை பொதுவாக
சந்தையில் அங்காடி அமைக்க பதிவு
கட்டணம் உண்டு. ஆனால் வியாபார
நோக்கற்று நடைபெற்ற இந்த சந்தையில்
முன்பதிவு செய்து வரும் யாரும் இலவசமாக
அங்காடி அமைக்க வழி செய்கின்றனர்.
என்றார்.

இதுகுறித்து இக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், முனைவர் ப. இராசேசுவரி அவர்கள், இந்த இயற்கைச் சந்தையை இரண்டாவது
முறையாக வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்
மாதந்தோறும் இரண்டாவது சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
இன்று (அக். 25) மாணவர்களுக்காகவும்
நாளை (அக்.26) பொது மக்களுக்காகவும்
காட்சிப்படுத்த உள்ளோம்" என்று
நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.

இச்சந்தையை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சிறப்புடன் நடத்தி முடித்தனர்.